புதுச்சேரி

காரைக்காலில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளின் தங்கும் விடுதிகளில் அமைச்சர் ராஜவேலு ஆய்வு மேற்கொண்டார்

காரைக்கால், அக்டோபர் 28: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளில் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக முல்லை நகரில் உள்ள மாணவிகள் விடுதிக்குச் சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பார்த்து தரத்தை சரிபார்த்தார். தொடர்ந்து விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து மாணவிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து கீழகாசக்குடியில் உள்ள மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைப் பரிசோதித்ததுடன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் கோவில்பத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன