புதுச்சேரி

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்டக் மாணவர் பெற்றோர் நலசங்கத்தின் சார்பில் ஏழை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்டக் மாணவர் பெற்றோர் நலசங்கத்தின் தலைவர் நாராயணசுவாமி, மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கனுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு மருத்துவ கல்வி பயில தேர்வு செய்யப்பட்ட ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு தேவையான கோர்ட், ஸ்டெத்தஸ்கோப் மற்றும் பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குலங்கள் காப்பும் அமைப்பின் கார்த்திகேயன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன