புதுச்சேரி

புதுச்சேரியில் இளநிலை எழுத்தர் பணிக்குத் தேர்வான 115 பேருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டன

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரியில் இளநிலை எழுத்தர் பணிக்குத் தேர்வான 115 பேருக்குத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் பணி ஆணைகளை வழங்கினர்.

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 59 ஆண்கள், 56 பெண்கள் என மொத்தம் 115 பேர் பணியாணை பெறத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு தேர்வான 115 பேருக்குப் பணி ஆணைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் என்ற ரமேஷ், அரசு தலைமைச் செயலர் டாக்டர் சரத்கான், அரசு செயலர் டாக்டர் குமார், சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், முருகேசன் மற்றும் கண்காணிப்பாளர்கள் நாராயணசுவாமி, சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 115 பேரும் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை எழுத்தர்களாகப் பணியில் சேர உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன