புதுச்சேரி

புதுச்சேரியில் சிங்காரம் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரியைச் சேர்ந்த படக்குழுவினர் தயாரித்து இயக்கியுள்ள சிங்காரம் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார். இப்படத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

அக்டோபர் 30 ஆம் தேதி சிங்காரம் திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கலைமாமணி குமரன், நடிகர் சங்க நிர்வாகி ராஜ்குமார் மற்றும் திரைப்பட குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன