புதுச்சேரி

புதுச்சேரி விடுதலை திருநாள் விழா இறுதி ஒத்திகை கடற்கரை சாலையில் நடைபெற்றது

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி அரசு சார்பில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தி சதுக்கத்தில் நடைபெற உள்ள புதுச்சேரி விடுதலை திருநாள் விழாவை முன்னிட்டு இறுதி ஒத்திகை நடைபெற்றது.

விழா நடைபெறும் இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், பங்கேற்பாளர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகையின் போது ஆய்வு செய்யப்பட்டது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன