காரைக்கால்

நெடுங்காடு – கோட்டுச்சேரி வழித்தடத்தில் முடங்கிய பி.ஆர்.டி.சி பேருந்து சேவை: அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் சரமாரி கேள்வி!

காரைக்கால்:
நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட வழித்தடங்களில் நீண்டகாலமாக பி.ஆர்.டி.சி அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் முடங்கிக் கிடப்பது தொடர்பாக, துறைசார்ந்த அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் நேரில் சரமாரி கேள்வி எழுப்பி உடனடியாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் பிராந்தியத்திற்குட்பட்ட நெடுங்காடு – கோட்டுச்சேரி சட்டமன்றத் தொகுதியில் கடந்த நீண்ட நாட்களாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) பேருந்து சேவைகள் சரிவர இயங்காமல் முடங்கியுள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறப் பொதுமக்கள் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாற்றுப் போக்குவரத்து வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மக்களின் அடிப்படைத் தேவைகளில் அதிகாரிகள் ஏன் அலட்சியம் காட்டுகிறார்கள் என்றும், பொதுமக்களின் இந்த நீண்டநாள் பிரச்னைக்கு எப்போது தீர்வு காணப் போகிறீர்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், முடங்கிக் கிடக்கும் பி.ஆர்.டி.சி பேருந்து சேவைகளை உடனடியாக சீரமைத்து, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் வலியுறுத்தினார். பொதுமக்களின் நலன் கருதி தங்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் வாகனப் பயன்பாட்டை முறைப்படுத்த துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், காரைக்கால் கிராமப்புறப் பகுதிகளில் அரசுப் பேருந்து சேவை முடங்கியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் இதில் துரிதமாகத் தலையிட்டு உடனடியாகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary: Nedungadu-Kottucherry MLA Dr. V. Vigneswaran questioned officials in Karaikal over PRTC bus services that have remained suspended on routes in his constituency for a long time, affecting students, workers and villagers. He urged them to restore the buses at once and said he would keep pressing until a permanent solution is found. According to the report, residents had raised the issue several times without action.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன