தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9ஆம் தேதி பொது விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை
புதுச்சேரி, அக்டோபர் 31: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமையை புதுச்சேரியிலும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அதேபோன்று புதுச்சேரியிலும் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை கோரியபோது அரசு அதனை ஏற்று அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விடுமுறை முடிந்து புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் பணியாளர்களுக்கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
English summary: The Puducherry Leader of the Opposition has asked Chief Minister Rangasamy to declare Monday, November 9, the day after Deepavali, a public holiday in Puducherry. In his statement he noted that neighbouring Tamil Nadu has declared that day a holiday and that the government accepted a similar request last year. He also asked for enough buses for students and employees travelling between Puducherry and Karaikal after the holiday.